Author Archive: Kopinath

திரிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வரலாறு 2

சின்னக் கதை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சின்னம் யாருக்காவது தெரியுமா? அதாவது உத்தியோகபூர்வமான சின்னம்? இக்கல்லூரிக்கு நூற்றுக்கணக்கான பழைய மாணவர் சங்கங்களும்  முகநூல் குழுக்களும் உள்ளமை யாவரும் அறிந்ததே. இந்தக் குழுக்கள், சங்கங்கள் யாவும் தாமே உத்தியோகபூர்வமானவை எனக் குறிப்பிட்டாலும் நான்கு சின்னங்களை இவர்கள் பயன்படுத்துவதால் – அதிலும் ஒரே பதிவிலேயே இரண்டுவிதமான சின்னங்களைக் காணமுடிவதால்…
Read more

திரிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வரலாறு 1

125ஆவது ஆண்டு நிறைவு மலரை முன்வைத்துச் சில குறிப்புகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தனது 125ஆவது நிறைவு விழாவினை 2015 ஆம் ஆண்டில் கொண்டாடியிருந்தது. நான் அப்பாடசாலையின் பழைய மாணவன். கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட போது அக்கல்லூரியின் மாணவனாக இருந்தவன். குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற்ற அந்த விழாவினை மேடைக்கு முன்னே அருகாமையில் நிலத்தில் அமர்ந்திருந்து…
Read more

ஈழத்துப் பாடசாலைகளின் வரலாறு

கனடாவில் வசிக்கும் முருகேசு பாக்கியநாதன் ஆய்வுசார் எழுத்துப்பணிகளில் ஈடுபட்டு வருபவர். இவரது ஒரு முக்கிய நூல் ‘பனையியல்’ என்பதாகும். இவர் கடந்த சில ஆண்டுகளாக இவர் கனடாவின் தாய்வீடு மாத இதழில் ஈழத்துப் பாடசாலைகளின் வரலாற்றை எழுதிவருகிறார். வடக்கிலும் கிழக்கிலுமாக சுமார் 40 பாடசாலைகளின் வரலாறு இவரால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நூற்றாண்டு விழாக் கண்ட…
Read more

வாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம்

2011 இல் நூலக நிறுவனத்தின் வியூகத் திட்டமிடலின் போது வாய்மொழி வரலாறுகளைப்பதிவு செய்தலை முதன்முதலாக நான் முன்மொழிந்திருந்தேன். 2012 இல் இந்தியா சென்றிருந்தபோது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதியினர், திண்டுக்கல் இராமசாமி, பல்லடம் மாணிக்கம் ஆகியோரது வாய்மொழி வரலாறுகளைப் பதிவுசெய்தமை எனது முதலாவது வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளாக அமைந்தன. ஈழத்து வாய்மொழி வரலாறு என்ற…
Read more

வாய்மொழி வரலாறு: மிகச் சுருக்கமான அறிமுகம்

நூலக நிறுவனம் போன்ற பல தளங்களிலான விரிவான ஆவணமாக்க நோக்கங்களுடன் செயற்படும் நிறுவனங்கள் தமது ஆவணப்படுத்தற் செயற்பாடுகளின் போது நாளாந்தம் எதிர்கொள்ளும் கேள்வி எவற்றினை முதலில் ஆவணப் படுத்துவது என்பதாகும். எல்லாவற்றினையும் உடனடியாக ஆவணப்படுத்துவது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. ஒரு நிறுவனத்துக்குக் கிடைக்கும் வளங்களின் அளவே அந்த நிறுவனம் முன்னெடுக்கக்கூடிய ஆவணப்படுத்தலின் அளவைத் தீர்மானிக்கின்றது. ஆவணப்…
Read more

இரத்தினஜீவன் ஹூலும் நாவலரும்

தேசம்நெற் இணைய இதழில் இன்று (2018-03-11) இரத்தினஜீவன் ஹூல் எழுதிய ”தேசிய முத்திரை கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் எம் பிள்ளைகளுக்கு முன்மாதிரிகளா?” என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. (http://thesamnet.co.uk/?p=93188) அக்கட்டுரையில் பின்வருமாறு உள்ளது. “25-11-1847 ம் திகதியிட்ட உதயதாரகைப் பத்திரிகையின்படி கலாநிதி. பீட்ட பேசிவல் பாதிரியின் தலைமையில் இயங்கிய வெஸ்லியன் செமினரிக்கு – இன்றைய மத்திய கல்லூரிக்கு…
Read more

நூலக வலைத்தளத்தின் நிதிப்பெறுமதி

நூலக வலைத்தளத்தில் (www,noolaham.org) இப்பொழுது ஏறத்தாழ 53,000 ஆவணங்கள் உள்ளன. அச்சுவடிவத்தில் இந்த ஆவணங்களைச் சேகரிக்கக் கிட்டத்தட்ட 50 இலட்சம் செலவாகும் எனவும் அவற்றைக் கொண்டு ஓர் நூலகமொன்றினை உருவாக்கக் கட்டிடச் செலவுகள் தவிர்த்து மொத்தம் ஒரு கோடி ரூபா ஆகும் எனக் கணக்கிட முடிகிறது. விபரம் வருமாறு   எண்ணிக்கை பெறுமதி மொத்தம் அலுமாரிகள்…
Read more

ஈழமுரசு

1980 கள் யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்த காலப்பகுதியாகும். இனப்பிரச்சினை கொழுந்துவிட்டெரியத் தொடங்கிய இக்காலப்பகுதி பல்வேறு பத்திரிகைகளின் தேவையை ஊக்குவித்தது எனலாம். ”ஏதோ ஒரு வகையில் அரச கையேடுகளாகவே பிரதிபலித்து வெளிவந்த கொழும்புப் பத்திரிகைகள் புறக்கணிக்கப்பட வேண்டியன என்ற கருத்து மக்களிடையே அன்று வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த மனோநிலை” ஈழமுரசு தொடங்கக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது….
Read more

1901-1930 கால யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள்

யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பணியாற்றிய எஸ். கதிரேசு என்பவரால் எழுதப்பட்டு 1905 இல் வெளியான A Handbook to the Jaffna Peninsula and a Souvenir of the opening of the Raiulway to the North என்ற நூலில் அக்காலத்தில் வெளியாகிக் கொண்டிருந்த பத்திரிகைகள் தொடர்பான சிறு அத்தியாயம் ஒன்று காணப்படுகிறது. வைமன்…
Read more

யாழ்ப்பாணப் பத்திரிகைகள் 1841-1900: மேலதிக ஆய்வுகளுக்கான குறிப்புக்கள்

1841 முதல் 1900 வரையான 60 ஆண்டுகளில் ஆகக் குறைந்தது 14 பத்திரிகைகள் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றினை விட வேறு பத்திரிகைகள் குறுகிய காலம் வெளியாகி மறைந்திருக்கலாம். இந்தப் 14 பத்திரிகைகளில் வித்தியாதர்ப்பணம், யாப்னா பிறிமன், யாழ்ப்பாணச் செய்திகள், வைத்திய விசாரிணி ஆகிய நான்கும் மிகக் குறுகிய காலமே வெளியாகின. உதயதாரகை, பாதுகாவலன், இந்து சாதனம்…
Read more