Latest Posts

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஏனைய யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள்

1841 முதல் 1875 வரையான 35 ஆண்டு காலத்தில் உதயதாரகை, வித்தியாதர்ப்பணம், யாப்னா பிறிமன், இலங்காபிமானி, பாலியர் நேசன் ஆகிய 5 பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. இதற்கு அடுத்த 25 ஆண்டுகளில் ஆகக் குறைந்தது 9 புதிய பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. 1876 பெப்ரவரி 19 அன்று கத்தோலிக்க பாதுகாவலன் கத்தோலிக்க திருச்சபையால் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இலங்கையின் முதலாவது…
Read more

யாழ்ப்பாணத்தின் முதற் சிறுவர் பத்திரிகை

1864-01-01 திகதியிட்ட இலங்காபிமானியின் (தொகுதி 2 இதழ் 1) தமிழ்ச் பகுதியில் பாலியர் நேசனின் வருகை பற்றிய செய்திக் குறிப்பொன்று காணப்படுகிறது. ”இப்பத்திரிகையின் முதற் சங்கியை எங்களுக்கனுப்பி வைத்ததற்காய் நன்றியறிந்தவர்களாயிருக்கிறோம். இப் பத்திரிகை யை வாசித்த மாத்திரத்தில் நமக்குண்டான சந்தோஷத்தை நாம் வெளிப்படுத்தல் கூடாது. நமதூரிலுள்ள வாலிபரும் வயோதிபரும் பெண் ஆணெனப் பேதமின்றித் தற்காலத்தில் நடைபெற்றுவரும்…
Read more

யாழ்ப்பாணச் செய்திப் பாரம்பரியத்தின் தொடக்கம்

யாழ்ப்பாணத்தின் முதலிரு செய்திப் பத்திரிகைகளின் இணைப்பில் சுமார் 70 ஆண்டுகள் (1863-1933) இலங்காபிமானி வெளிவந்துள்ளது. இடையில் பெரிய தடங்கல்கள் ஏதும் ஏற்பட்டிராவிடின் வாரப்பத்திரிகை என்ற வகையில் 3,000க்கும் அதிமான இதழ்கள் வெளிவந்திருக்க வேண்டும். ஆயினும் இதுவரை எந்த விரிவான ஆய்வுகளுக்கும் இப்பத்திரிகை எடுத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இலங்காபிமானியின் பெரும்பாலான இதழ்களைப் பெற முடியாமை இதற்குக் காரணமாக…
Read more

யாழ்ப்பாணத்தின் முதற் செய்திப் பத்திரிகைகள்

இப்போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் உதயதாரகைக்கு அடுத்ததாக அறியப்படும் யாழ்ப்பாணத்துப் பத்திரிகை வைமன் கு. கதிரவேற்பிள்ளையை ஆசிரியராகக் கொண்ட லிற்றரரி மிரர் (Literary Mirror) என்பதாகும். 1853 மே 6ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இப்பத்திரிகை வித்தியாதர்ப்பணம் என்ற தமிழ்ப் பெயரினையும் கொண்டிருந்தது.1 ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது. பருத்தித்துறை நீதிமன்றத்தில் பணிபுரிந்த நீதிபதி லீச்சிங்…
Read more

யாழ்ப்பாணத்தின் முதற் பத்திரிகை

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கு நாடுகளிலிருந்து மதம் பரப்பும் நோக்குடன் மிசனரிகள் உலகெங்கும் தம் பணிகளை முன்னெடுக்கத் தொடங்கினர். இவர்களது முதன்மை நோக்கம் மதம் பரப்புதலாக இருந்தபோதும் அதனுடனிணைந்த பல்வேறு சமய சமூகப் பணிகளும் அவர்களால் மேற்கொள்ளப்பட்டன. அவ்வகையில் வந்த ஒரு நிறுவனமான அமெரிக்க மிசன் யாழ்ப்பாணத்தின் கல்வி, சமூக, பண்பாட்டுப் போக்கில் முக்கிய மான செல்வாக்குச்…
Read more

உதயதாரகை முதல் காலைக்கதிர் வரை

மக்களை மிக அதிகளவில் சென்றடையும் எழுத்தாவணங்கள் பத்திரிகைகள். மக்களின் சிந்தனையில் இவை முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்றன அல்லது செலுத்த முற்படுகின்றன. கடந்தகால சமூகத்தின் சமய, சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுப் பரப்புக்களின் போக்கில் பத்திரிகைகளின் செல்வாக்குக் குறைத்து மதிப்பிட முடியாதது. வரலாறு எழுதுதலில் முதல்நிலைத் தகவல் வளங்களான பத்திரிகைகளின் உசாத்துணை அடிப்படையானதும் முக்கியமானதும் ஆகும். யாழ்ப்பாணத்திலேயே…
Read more